சென்னை : டிபி சத்திரம் காவல் ஆய்வாளரான ராஜேஸ்வரி செனாய் நகர் கல்லறை சாலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது, சுயநினைவின்றி கிடந்த இளைஞர் ஒருவரை மீட்டு தோளில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில் சுயநினைவின்றி கிடந்த இளைஞர் செனாய் நகரை சேர்ந்த உதயா(25) என தெரியவந்தது.
முதலமைச்சர் பாராட்டு
இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனித நேயமிக்க செயலை பாராட்டும் விதமாக அவரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இளைஞர் உயிரிழப்பு
இந்நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக டிபி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் பாராட்டு