செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சார்ந்தவர் அருள் தாஸ்.
இவர் நந்திவரத்தில் 450 சதுர அடியில் வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இவர் கூடுதல் சதுரடியில் கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலர்கள் அவரது வீட்டை இடித்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் போராட்டம்:
இதன்காரணமாக அருள்தாஸ் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்து திடீரென 10ஆம் நுழைவுவாயிலில் முதலமைச்சர் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்' - கமல் ஹாசன்