ETV Bharat / state

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி துபாய் செல்ல முயன்றவர் கைது - Man arrested with fake passport

சென்னை: போலி கடவுச்சீட்டு மூலம் சென்னையிலிருந்து நேற்று (டிசம்பர் 27)  துபாய் சிறப்பு விமானத்தில் செல்ல முயன்றவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

fake passport
fake passport
author img

By

Published : Dec 28, 2020, 10:43 AM IST

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திலிருந்து துபாய்க்கு நேற்று (டிசம்பர் 27) இரவு சிறப்பு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் திருச்சியைச் சேர்ந்த சையத் முகமது (35) என்பவர் பயணம் செய்யவந்தார். அவரது கடவுச்சீட்டைச் (பாஸ்போர்ட்) சோதனை செய்தபோது வேறு நபரின் கடவுச்சீட்டில் புகைப்படத்தை மாற்றி வந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சையத் முகமது விமான பயணத்தை ரத்துசெய்து மத்திய குற்றப்பிரிவு காவலரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து சையத் முகமதுவை அழைத்துச்சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.