ETV Bharat / state

மாணவியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துரையினர் கைது செய்தனர்.

சுரேந்தர்
சுரேந்தர்
author img

By

Published : Dec 9, 2021, 9:04 AM IST

சென்னை: சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமி பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேந்தர் (21) என்ற இளைஞர் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று விழுப்புரம், விருத்தாசலம், பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, நாகபட்டினம் என ஊர் ஊராக சுற்றி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

பின்னர் சென்னையில் தெரிந்தவர் ஒருவர் வீட்டிற்கு அடைக்கலம் தேடிச் சென்றபோது சங்கர் நகர் காவல் நிலையத்தில் இருவரும் பிடிபட்டனர். பின்னர் சிறுமியைப் பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்கள் சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குட்கா பொருள் விற்பனை செய்த இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.