ETV Bharat / state

மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோவில் ஒருவர் கைது - aquest

ஆவடி அருகே +2 படித்து வரும் மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துரையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

#etvbharat#avadi#school#girl#sexual#abuse#aquest#arrest#  chennai news  chennai latset news  sexual abusement  sexual harrasment  chennai avadi girl sexual abusement  pocso act  pocso  man arrested in pocso act  crime news  சென்னை செய்திகள்  மாணவிக்கு பாலியல் வன்புணர்வு  போக்சோ சட்டம்  ஆவடியில் மாணவிக்கு பாலியல் வன்புணர்வு  பாலியல் வன்புணர்வு  போக்சோவில் கைது  பாலியல் விவகாரம்  பாலியல் வழக்கு
+2 மாணவிக்கு பாலியல் வன்புணர்வு..போக்சோவில் ஒருவர் கைது
author img

By

Published : Jun 19, 2021, 8:02 AM IST

சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி, ஒரு தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 24ஆம் தேதி, மாணவி வீட்டிலிருந்து மாயமானார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையிலான காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், திருநின்றவூர் சுதேசி நகரைச் சேர்ந்த கௌதம் (18) என்ற இளைஞர், மாணவியைக் கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.

அப்போது திருவள்ளூர் மாவட்டம், புதுசத்திரம் பகுதியில் தங்கியிருந்த கௌதமை காவல் துறையினர் பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது கௌதம் மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றார் எனவும், அவரை திருநின்றவூர், பவானி அம்மன் கோயிலில் வைத்து கட்டாய தாலி கட்டி திருமணம் செய்துள்ளார் என்றும் தெரியவந்தது.

மேலும் அவர் புதுசத்திரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து மாணவியுடன் தங்கியதாகவும், அங்கு மாணவியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அதன் விளைவாக, மாணவி கர்ப்பமாகியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவியை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், கௌதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

பின்னர், கௌதமை திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: முன்விரோதத்தில் சிறுவனை கழுத்தை நெரித்தவருக்கு சிறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.