ETV Bharat / state

வியாபாரி சங்க பொருளாளரை கத்தியால் குத்தியவர் கைது - மண்ணூர்பேட்டை வியாபாரி சங்க பொருளாளர்

பாடி- மண்ணூர்பேட்டை வியாபாரி சங்க பொருளாளரை கத்தியால் குத்திய போட்டோ கிராபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வியாபாரி சங்க பொருளாளரை கத்தியால் குத்தியவர் கைது man-arrested-for-stabbing-trade-union-treasurer
வியாபாரி சங்க பொருளாளரை கத்தியால் குத்தியவர் கைதுman-arrested-for-stabbing-trade-union-treasurer
author img

By

Published : Apr 4, 2022, 9:17 AM IST

சென்னை: அம்பத்தூரை அடுத்த பாடி வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இனிப்பு கடை நடத்தி வரும் இவர் பாடி- மண்ணூர்பேட்டை வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார். நேற்று (ஏப்ரல்.3) இரவு செல்வகுமார் பாடி ஜெகதாம்பிகை நகரில் உள்ள பாடி, மண்ணூர்பேட்டை வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்குச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் பாடி சி.டி.எச் சாலையில் போட்டோ ஸ்டூடியோ நடத்திவரும் அமுல்ராஜ் (61) என்பவர் வந்துள்ளார். இந்தநிலையில், வரவு - செலவு கணக்குகளைப் பார்ப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த அமல்ராஜ் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து செல்வகுமாரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

Man arrested for stabbing trade union treasurer
வியாபாரி சங்க பொருளாளரை கத்தியால் குத்தியவர் கைது

இதில், அவருக்கு வயிறு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாடி டி.வி.எஸ்.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அமல்ராஜை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.