ETV Bharat / state

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை கஞ்சா விற்றவர் கைது அம்பத்தூர் கஞ்சா விற்ற இளைஞர் கைது சென்னை கஞ்சா விற்ற இளைஞர் கைது Man arrested for selling cannabis to Ambattur SIPCOT Ambattur Cannabis Sales Youth Arrested Chennai Cannabis Arressted
Man arrested for selling cannabis to Ambattur SIPCOT
author img

By

Published : Feb 27, 2020, 1:36 PM IST

சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வட மாநிலத் தொழிலாளர்கள் கஞ்சா போதையில் சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பட்டரவாக்கம் - ஜி.என்.டி சாலையில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரைச் சுற்றி வளைத்து, பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்ஜூன் தாஸ் என்பதும்; சென்னை அன்னை சத்தியா நகரிலிருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வட மாநில இளைஞர்களைக் குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

பின்னர் அர்ஜூன் தாஸை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா, 700 ரூபாய் ரொக்கப் பணம், கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் அர்ஜூன் தாஸை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கரூரில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலரிடம் விசாரணை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.