சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகூரான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவலர்கள் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் காசிமேட்டில் உள்ள எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பிரபு என்பது தெரியவந்தது.
பிறகு அவரிடம் சின்ன சின்ன பொட்டலங்களாக வைத்திருந்த மொத்த அளவிலான 500 கிராம் எடையுள்ள கஞ்சாவைக் கைப்பற்றினர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
இதையும் படிங்க: கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து