ETV Bharat / state

முதியோரை குறிவைத்து கொள்ளையடித்த நபர் கைது! - demanding money for the elderly

சென்னை: ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரும் முதியோர்களை குறிவைத்து பணம் எடுத்து தருவதாகக் கூறி கொள்ளையடித்து வந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வயதானவர்களை குறி வைத்து கொள்ளையடித்து வந்த நபர் கைது!

author img

By

Published : May 15, 2020, 10:15 AM IST

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (65), தனது வங்கி கணக்கில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன் உடனடியாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் ஏடிஎம் மையத்திற்கு பிரபாகரன் பணம் எடுக்கச் சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உதவுவதாகக் கூறி தன்னிடம் இருந்த ஏடிஎம் கார்டை பெற்று பணம் எடுத்து தந்ததாக கூறினார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பணம் எடுக்க வந்த பிரபாகரனிடம், நபர் ஒருவர் பணம் எடுத்து தருவதாகக் கூறி போலி ஏடிஎம் கார்டை தந்துவிட்டு செல்வது சிசிடிவியில் தெரியவந்தது.

வயதானவர்களை குறி வைத்து கொள்ளையடித்து வந்த நபர் கைது!

இதையடுத்து, சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். அப்போது வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி( 50) என்பது தெரியவந்ததையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர் ஏடிஎம் மையங்களில் முதியோரை குறிவைத்து பல பேரிடம் உதவுவதாகக் கூறி ஏடிஎம் கார்டை பெற்று பணம் எடுத்துவிட்டு போலி ஏடிஎம் கார்டை கொடுத்து, பின்னர் வேறு மையத்தில் அவர்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையும் படிங்க...என்எல்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.