ETV Bharat / state

இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் அத்துமீறிய போதை ஆசாமி! - chennai crime news

சென்னை: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கஞ்சா அடித்த போதையில் இருந்த ஒருவர், தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை ஆசாமி
போதை ஆசாமி
author img

By

Published : Feb 18, 2020, 10:19 AM IST

சென்னை நங்கநல்லூரில் ரகுபதி நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி(80). இவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர், திடீரென்று மூதாட்டியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி, பயத்தில் சத்தம் போட்டுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு குவிந்த அக்கம்பக்கத்தினர், அந்த அடையாளம் தெரியாத நபரைப் பிடித்தனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழவந்தாங்கல் காவல் துறையினர், அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவரின் பெயர் தினேஷ் ( வயது 21) என்பதும், கேட்டரிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிக அளவில் கஞ்சா போதையில் இருந்ததால் தான், இளம்பெண் என்று நினைத்து மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, அவர் மீது பழவந்தாங்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குத்தாலம் அருகே இறுதி ஊர்வலத்தில் தகராறு: இளைஞர் குத்திக்கொலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.