சென்னை அமைந்தகரை கன்னையா தெருவைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(35). இவருடைய கணவர் நட்ராஜ் இறந்து விட்டதால் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இவருடைய மகள் யாமினி(15). அமைந்தகரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருக்கிறார். இவர்களின் உறவினரான திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த மணிமாறன், அடிக்கடி எல்லம்மாள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம் .
இந்நிலையில் மணிமாறன், யாமினி இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த எல்லம்மாள், மகள் யாமினியை கண்டித்துள்ளார்.
இதனிடையே, யாமினியை வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்றும் தனது உறவினரான மணிமாறன் தான் கடத்தி சென்றுவிட்டதாகக் கூறி அமைந்தக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
![marrying minor girl man arrested](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-minorgirl-marriage-arrest-script-7202290_03082019205523_0308f_1564845923_447.jpg)
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிமாறனை கைது செய்து யாமினியை மீட்டனர். மேலும் கடத்தல், மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிமாறனை சிறையில் அடைத்தனர்.