ETV Bharat / state

காவல் நிலைய முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: திடுக்கிடும் தகவல்

திருவல்லிக்கேணி காவல் நிலைய முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.

காவல் நிலைய முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

author img

By

Published : Jan 4, 2023, 11:22 AM IST

சென்னை: திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு கடந்த மாதம் 2ஆம் தேதி அஞ்சல் அட்டை ஒன்று வந்தது. அந்த அஞ்சல் அட்டையில் Chennai kaleda (சென்னை காலிடா) 9840101014 & 8248838351 Next Target December -25 & Happy New year 2023 Blast மறு பக்கத்தில் பிறை நிலா நட்சத்திரமிட்டு 786 மற்றும் அரபியில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இந்த கடிதத்தை கண்ட திருவல்லிக்கேணி போலீசார் அதிர்ச்சியடைந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
குறிப்பாக கடிதத்தில் எழுதியிருந்த இரு செல்போன் எண்களும் சென்னை பட்டாளத்தை சேர்ந்த சபீர் (38) என்பவருடையது எனவும் இவர் அண்ணாசாலை ரிச்சி தெருவில் Kuber InfoTech என்ற கடையில் Computer & Laptop Service செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் கடையில் பணியில் இருந்த போது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்பவர் ஆப்பிள் மேக் லேப்டாப் ஒன்றை சர்வீஸ் செய்ய வந்தார். அப்போது சபீர், ஹனுமந்தப்பாவிடம் Password & ID கேட்டப்போது தனக்கு எதுவும் தெரியாது என்றும் Password & ID-ஐ மாற்றி தருமாறு கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த சபீர், லேப்டாப்பை பழுது பார்க்க முடியாது எனவும் வேறு கடையில் பழுது பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஹனுமந்தப்பா இதை தாங்கள் வைத்திருங்கள், பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என சபீரின் செல்போன் எண்களை வாங்கி சென்றவர், மூன்று தினங்கள் கழித்து செல்போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது லேப்டாப் உரிமையாளர் இறந்துவிட்டதாகவும், தனக்கு Password & ID தெரியாது என்றும் லேப்டாப்பை வைத்துக்கொண்டு ரூ 40,000 தருமாறு கேட்டார். அதற்கு சபீர், பணம் தர இயலாது, லேப்டாப்பை வந்து எடுத்துச் செல் என கூறினார். ஆத்திரமடைந்த ஹனுமந்தப்பா பணம் தரவில்லை என்றால் உன்னை சும்மா விடமாட்டேன் என மிரட்டினார்.

இதனால் சபீரை பழிவாங்குதற்காக ஹனுமந்தப்பா வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. இது சம்மந்தமாக ஹனுமந்தப்பா செல்போன் எண்ணை சைபர் பிரிவு மூலம் கண்டறிந்து திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் 26ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்கு சென்றன். அங்கு தேடியபோது, ஹனுமந்தப்பா அவனுடைய மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டு எலக்ட்ரிக் சிட்டியில் உள்ள நாராயண லேஅவுட் பகுதியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் - கமலாபுரத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா முதலில் சென்னை பூந்தமல்லியில் பெயிண்டர் வேலை செய்தார். பின்னர் அந்த தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் லேப்டாப், செல்போன் திருட்டில் ஈடுபட்டு அவற்றை சென்னை ரிச்சி தெருவில் வந்து விற்பனை செய்தார்.

சில நேரங்களில் ரிச்சி தெருவில் நின்ற படியே செல்போன் சார்ஜர், ஹெட்செட் விற்பனை செய்தும் வந்தார். சொந்த ஊரான கர்நாடகாவுக்கு சென்று திரும்பும் போது அங்கும் கைவரிசை காட்டிவிட்டு, சென்னையில் வந்து விற்றுவிட்டு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

கடந்த எட்டு ஆண்டுகளாக இதே போல திருட்டில் ஹனுமந்தப்பா ஈடுபட்டார். ஹனுமந்தப்பாவிடமிருந்து ஒரு லேப்டாப், 5 செல்போன்கள், 1 set airpods ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் வேறொரு நபரின் ஆதார் கார்டை ஹனுமந்தப்பாவிடம் வாங்கிக் கொண்டு, அவருக்கு சிம் கார்டு கொடுத்த தண்டையார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (39) என்பவரையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு: கரும்பை சுவைத்து பார்த்து அலுவலர்கள் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.