சென்னையில் பெரியமேடு பகுதியில் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவலர்கள், நேற்றிரவு சூளை ரவுண்டானா பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த நபர் ஒருவர், வாகன ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த காவல் ஆய்வாளர், அந்த நபரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதில், கோபமடைந்த அந்த நபர், கீழே கிடந்த இரும்பு ராடால் காவல் ஆய்வாளர் பிரபுவை தாக்க முற்பட்டுள்ளார். இதனைப் பார்த்த உதவி ஆய்வாளர் முனிரத்னம் அந்நபரை தடுக்க செல்கையில், தவறுதலாக அவரை பலமாகக் கம்பியால் அந்நபர் தாக்கினார்.
இதில், உதவி காவல் ஆய்வாளருக்கு தலை, கைகளில் பலமாகக் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் தறபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து காவலரைத் தாக்கிய நபரை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் சூளைப்பகுதியைச் சேர்ந்த மோகன் (28) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டமையால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு நரம்பியல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பெண்ணின் மூக்கில் குத்திய சோமேட்டோ ஊழியர் கைது!