ETV Bharat / state

தனியார் கல்வி கட்டணத்தை அரசு கருவூலம் வசூலிக்க கோரிய வழக்கு: இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பதிலளிக்க உத்தரவு! - malpractise

சென்னை: தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு கருவூலத்தின் மூலமே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 19, 2020, 4:39 PM IST

தனியார் பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்துவருகின்றன. ஆனால் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.

எனவே, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில், மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, அரசின் கருவூலம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம், அரசின் கருவூலம் மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் ஊதியமாக காட்டப்படும் கணக்கு அதிகமாகவும், உண்மையில் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் அதை விட மிகக் குறைவாகவும் உள்ளது. வருமான வரி அலுவலகம், இதன் பேரில் ஆய்வு செய்தால், மிகப் பெரிய முறைகேடு அம்பலமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாரயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து அதற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.