ETV Bharat / state

கடந்த முறை செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது - கமல் அட்வைஸ் - MNM

மக்கள் நீதி மய்யம் கடந்த முறை தேர்தல்களில் செய்த தவறுகளை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக்கூடாது, என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மநீம உறுப்பினர்களுக்கு கமல் அட்வைஸ்
மநீம உறுப்பினர்களுக்கு கமல் அட்வைஸ்
author img

By

Published : Nov 16, 2022, 10:26 PM IST

சென்னை: வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளோடு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்றைய தினம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

85 மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "2024-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்துக்கொண்டு உள்ளோம். இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ’’நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கிளை அளவில் கட்சியை பலப்படுத்தவும், கடந்த தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது’’ எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு வாய்ப்பே இல்லை - ஈபிஎஸ் தடாலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.