ETV Bharat / state

மநீம-வை அங்கீகரிக்காத தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - காத்துவாக்குல கழட்டிவிடப்பட்ட கதை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியிட்டப்பட்ட மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், பல்வேறு கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றதுடன் அந்தக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையையும் பதிவிட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்
author img

By

Published : Feb 23, 2022, 9:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தியது.

அந்தத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களைப் பெற்று, பரிசீலனை செய்து, இறுதி வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

திமுக, அதிமுக, பாஜக, சிபிஐ, சிபிஎம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் இடம்பெறவில்லை
மக்கள் நீதி மய்யம் இடம்பெறவில்லை

தொண்டர்கள் அதிருப்தி

தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம், வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குகள் விவரம் என அனைத்தும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/result/election_urban2022_server_2/index.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில் அகர வரிசைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற விவரங்களும், பதிவு செய்யப்பட்டாத கட்சியின் விவரங்கள் (சுயேச்சைகள்) மற்றவை என்ற இடத்திலும் வெளியிடப்பட்டன. இதில் மக்கள் நீதி மய்யத்தின் பெயர் எங்கும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாநில தேர்தல் ஆணையம் இணையதள பக்கம்
மாநில தேர்தல் ஆணையம் இணையதள பக்கம்

தேர்தல் ஆணையம் விளக்கம்

மாநகராட்சி வார்டு உறுப்பினர் - அனைத்து மாவட்டங்கள் வெற்றி பெற்ற விவரங்கள் https://tnsec.tn.nic.in/result/election_urban2022_server_2/table_1a_party_list.php?post_code=Ng== என்ற முகவரியிலும், நகராட்சி வார்டு உறுப்பினர் அனைத்து மாவட்டங்கள், https://tnsec.tn.nic.in/result/election_urban2022_server_2/table_1a_party_list.php?post_code=OA== என்ற முகவரியிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் அனைத்து மாவட்டங்கள், https://tnsec.tn.nic.in/result/election_urban2022_server_2/table_1a_party_list.php?post_code=MTA= என்ற முகவரியிலும் வெளியிடப்பட்டன.

மாநில தேர்தல் ஆணையம் இணையதள பக்கம்
மாநிலத் தேர்தல் ஆணையம் இணையதள பக்கம்

மேலும் கட்சியின் பெயர் இடம்பெறாதது குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, "மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் , பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகியவற்றில் எந்த ஒரு இடங்களிலும் வெற்றிபெறவில்லை.

மாநில தேர்தல் ஆணையம் இணையதள பக்கம்
மாநிலத் தேர்தல் ஆணையம் இணையதள பக்கம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இல்லாமல் மற்றவை என்ற விவரத்தில் சுயேச்சைகள் உட்பட 23 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு வார்டில் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளனர்.

அதனால் அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாததால் சேர்க்கவில்லை" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திணறிய கட்சிகள் - ஒரு பார்வை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.