ETV Bharat / state

பிப்ரவரி 11இல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூடுகிறது!

author img

By

Published : Feb 4, 2021, 9:44 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது.

Kamal
Kamal

மக்கள் நீதி மய்யத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் பிப்ரவரி 11ஆம் தேதி வியாழன் அன்று காலை 10 மணிக்கு சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழுவில், 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் நான்காவது ஆண்டு தொடங்க விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை கமல் ஹாசன் அறிவிக்க இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களாகிய தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர், சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள், இணை மாவட்ட செயலாளர்கள், துணை மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென தலைமை அலுவலக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.