ETV Bharat / state

'இந்திய வரலாறு காட்டாற்று வெள்ளம் போன்றது' - எம்பி வெங்கடேசன் - 16 பேர் கொண்ட குழு

இந்தியாவின் வரலாறு காட்டாற்றை போல் எண்ணற்ற பண்பாடுகளை கொண்டது. ஆனால், மத்திய அரசு அமைத்துள்ள 16 பேர் கொண்ட குழு ஒருதலைபட்சமாக செயல்பட்டு புராணங்களே இந்தியாவின் வரலாறு என எழுதிவிடும் என மதுரை எம்பி., சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Madurai MP su.venkatesan  alleges Centre cultural committee

author img

By

Published : Sep 24, 2020, 7:43 PM IST

Updated : Sep 24, 2020, 8:07 PM IST

சென்னை: மத்திய அரசு இந்தியாவின் பண்பாட்டு மற்றும் தொன்மையை ஆராய 16 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதாக மத்திய கலாச்சார துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த குழுவில் தென் இந்தியா, வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள், சிறுபான்மை, தலித், பெண் என யாரும் இடம் பெறவில்லை. குழுவில் இந்து உயர் ஜாதி வகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

குழுவில், இந்தியாவில் தமிழ் உள்பட செம்மொழி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மொழிகளின் அறிஞர்கள் இல்லை. ஆனால் ஜாதி சங்கத் தலைவர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை, வரலாற்றை பிரதிபலிக்க கூடியதாக அந்தக் குழு இல்லை.

அந்தக் குழு எழுத போகும் வரலாறு ஏற்கனவே சொல்லப்படும் புரணங்கள் தான் இந்தியாவின் வரலாறு என மாற்றி எழுத வாய்ப்பு உள்ளது. எனவே குழுவை கலைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம்.

32 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்கி உள்ளோம். நிச்சயமாக மத்திய அரசு நியமித்து உள்ள குழுவை கலைக்க வேண்டும். இந்தியாவின் வரலாறு காட்டாற்றை போல் எண்ணற்ற பண்பாடுகளை கொண்டதாக உள்ளது. அந்த தன்மைகள் அனைத்தும் இடம் பெறும் வகையில் இந்தியாவின் பண்பாடு எழுதப்பட வேண்டும்.

இந்திய வரலாறு காட்டாற்று வெள்ளம் போன்றது

இப்போது அமைக்கப்பட்டு உள்ள குழு நிச்சயமாக ஒரு தலைபட்சமாக இருக்க கூடிய குழு என்பதால் அதை கலைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'தற்போதைய பொருளாதார நிலையில் தேசிய கல்விக் கொள்கை பகல் கனவாகவே முடியும்'

Last Updated : Sep 24, 2020, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.