டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. அதனைக் கண்டித்து சென்னை பல்கலைக்கழக அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர்களான மோகன் பகவத், கோல்வாக்கர் ஆகியோரின் உருவப்படங்களை கிழித்து எறிந்தனர்.
அப்போது மாணவர்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாகவும், இதனால் நாட்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களைக் கடுமையாக பாதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை துண்டாடும் எதிர்க்கட்சிகள்: பேரணியாக சென்று ஆட்சியரிடம் பாஜக மனு!