சென்னை பல்கலைக்கழகம் சேப்பாக்கம் வளாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய மக்கள் தொகை பதிவேடு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”டெல்லி பல்கலைகழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கி இரண்டு மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்களை விடுதலை செய்யும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து நடைபெறும்
போராட்டத்தின் வடிவத்தை மாற்றுவதற்கு நாங்கள் காரணமல்ல. எதிரில் உள்ளவர்கள்தான் காரணம்” என்றனர்.
இதையும் படிங்க:
குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்