மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்ற பெயரும் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களின் பெயரில் இருந்துதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
கிழக்கிந்திய கம்பெனி தாங்கள் குடியமர்வதற்காகத் தேர்வுசெய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராசப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன. இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே தற்காலத்தில் சென்னை என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நாட்டின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதாரத் தலைமைப் பீடமாக வளர்ந்தது மதராஸ்.
நாடு விடுதலைபெற்ற பின்னர், 1947இல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டது.
மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பட்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்தன. 1991இல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. அதேபோல் பம்பாய் 1995இல் மும்பை எனப் பெயர் மாற்றம் கண்டது.
1996 ஜூலை 17இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், 'மெட்ராஸ்' அதிகாரப்பூர்வமாக 'சென்னை' என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஆளுநர் உரையில் இடம்பெற்ற ஸ்டாலினின் கனவுத் திட்டம்!