ETV Bharat / state

மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எம்.ஏ.எம். ராமசாமி அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பந்தயத்தில் பங்கேற்க அனுமதிக்காத மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
chennai high court
author img

By

Published : Nov 23, 2020, 9:43 PM IST

மெட்ராஸ் ரேஸ் கிளப் பந்தயங்களில் பங்கேற்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் தங்களின் பெயர் மற்றும் குதிரைகளின் விவரம் குறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் பதிவு செய்யவேண்டும். இந்த பந்தயங்களில் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என ரேஸ் கிளப் நிர்வாகம் கடந்தாண்டு மறுத்து உத்தரவிட்டது.

அதனை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.சி. முத்தையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், குதிரையின் உரிமையாளராக அறக்கட்டளை நிர்வாகம் இருக்கமுடியாது என்ற ரேஸ் கிளப்பின் வாதம் ஏற்புடையதல்ல. எனவே, செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை, உரிய கட்டணங்கள் செலுத்தச் செய்து 2020-21ஆம் ஆண்டு நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அறக்கட்டளைக்கு சொந்தமான 67 பழைய குதிரைகள் பந்தயங்களில் பங்கேற்க முடியாது என்றும், அறக்கட்டளை நிர்வாகம் புதிதாக வாங்கியுள்ள நான்கு குதிரைகளை பதிவு செய்ய முடியாது எனவும் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் விதிகளில் திருத்தம் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் ஏ.சி. முத்தையா மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன் முன்பு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன், "செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பதிவுசெய்து பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தனி நீதிபதி ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனால், அந்த உத்தரவுகளை மீறும்வகையில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது ரேஸ் கிளப் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த செயலுக்காக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உடனடியாக 1 லட்சம் ரூபாய் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளின் நலனுக்காக வழங்கவேண்டும். மனுதாரரின் புதிய குதிரைகளை பதிவு செய்வதோடு ஏற்கெனவே உள்ள குதிரைகளையும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: லாரி தொழிலை நசுக்கும் தமிழ்நாடு அரசு - லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.