ETV Bharat / state

அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்ப்பதே அரிதாகிவிடும் - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை! - யானை பாதுகாப்பு

யானைகளை பாதுகாக்க தீவிரம் காட்டாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 10:09 PM IST

சென்னை: வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது சமீபத்தில் மின்வேலியில் சிக்கி நான்கு யானைகள் மரணமடைந்தது.

இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யானைகளை பாதுகாக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது என்றும், மரக் காட்சி சாலையில் தான் காண முடியும் என வேதனை தெரிவித்தனர். மேலும் விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினர்.

இந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்வதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் - ரூ.296 கோடியில் ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.