ETV Bharat / state

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு வழக்கில் எஸ்கேப்.. மற்றொரு வழக்கில் சிக்கல்!

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 30, 2022, 4:12 PM IST

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே சமயம் அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்.. முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.