ETV Bharat / state

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு: எந்த கருணையும் காட்டப்படாது - அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை - தலைமை செயலாளர் ஆஜராக நேரிடும்

மாநிலம் முழுதும் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமைச் செயலாளரை ஆஜராகச் சொல்லி உத்தரவிட நேரிடும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
author img

By

Published : Dec 1, 2021, 10:20 PM IST

சென்னை: மாநிலம் முழுதும் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீர் நிலைகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (டிச.1) விசாரணைக்கு வந்தது.

சென்னை அருகே உள்ள சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர் நிலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள செட்டிப் பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் மாவட்டம் வடவம்பாலம் பாசன கால்வாய், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி, கீழ்மருவத்தூர் ஏரி, கடலூரில் வி. மாத்தூர் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

நீர் நிலைகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்கு
நீர் நிலைகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்கு

தண்ணீர் மிகவும் அவசியமானது

அப்போது, நீதிபதிகள், "தண்ணீர் மிகவும் அவசியமானது, தற்போது மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்குச் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுக் கண்காணிப்போம்" என்றும் தெரிவித்தனர்.

தண்ணீர் மிகவும் அவசியமானது
தண்ணீர் மிகவும் அவசியமானது

இதனையடுத்து, அரசு தரப்பில், "ஆக்கிரமிப்புகளை அகற்றக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது" என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசும் ஆக்கிரமித்துள்ளது

அப்போது சில மனுதாரர்கள் தரப்பில், தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல், நீர் நிலைகளிலேயே குப்பை கொட்டும் மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசும் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அரசும் ஆக்கிரமித்துள்ளது
அரசும் ஆக்கிரமித்துள்ளது

தலைமைச் செயலாளர் ஆஜராக நேரிடும்

இதையடுத்து நீதிபதிகள், மாநிலம் முழுதும் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 8ஆம் தேதி தள்ளிவைத்தனர். தவறும்பட்சத்தில் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும்" என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதேசமயம், 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'தல' என்று அழைக்க வேண்டாம் - அஜித் குமார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.