ETV Bharat / state

அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - ஜோ மைக்கேல் பிரவீன்

Apsara Reddy: அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில், யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 12:19 PM IST

சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் யூடியூப் தளத்தில் தவறான தகவல்களை பதிவு செய்ததுடன், அவரது புகழுக்கும், கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்ததாக, அப்சரா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜோ மைக்கேல் பிரவீன் பதிவு செய்ததாக கூறப்படும் 10க்கும் மேற்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும், அவரை சார்ந்தோர்கள் அவதூறான வீடியோ பதிவிட்டிருந்தால், அதையும் உடனடியாக நீக்க வேண்டும் என கூகுள் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட யூடியூபர் நடவடிக்கைகளை கண்டித்ததுடன், அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். சமூகத்தில் திருநங்கைகள் சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்களைக் குறிப்பிட்ட நீதிபதி, சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துக்கள், அவர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலும், கண்ணியமாக இருக்கும் வகையிலும் வழிநடத்த கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அப்சரா ரெட்டி, இது போன்ற வெறுப்பு பிரச்சாரம் மற்றும் தவறான பதிவுகள் குறித்து தான் எப்போதும் மௌனமாக இருப்பதாகவும், உரிய நீதி வேண்டி நீதிமன்றங்களை நாடி சரியான தீர்வு பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். தவறான எண்ணங்களையும், வெறுப்புணர்வையும் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டிய அப்சரா ரெட்டி, இது போன்ற செயல்கள் மனிதாபிமானமற்றது என்றும் சாடினார்.

மேலும், தான் இத்தோடு நிறுத்தப் போவதில்லை என்றும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்றும், அப்படி இன்னலுக்குள்ளாகும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு என்றுமே துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றமல்ல.. சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.