ETV Bharat / state

அரியலூர் விவசாயி மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தலையிடக்கூடாது: உயர் நீதிமன்றம் - சென்னை

அரியலூரில் காவல்துறையினர் தாக்கியதால் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிறப்பு குழுவில் காவல்துறையினர் இடம் பெற கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறியலூர் விவசாயி தாக்கப்பட்ட வழக்கு
அறியலூர் விவசாயி தாக்கப்பட்ட வழக்கு
author img

By

Published : Dec 15, 2022, 1:04 PM IST

சென்னை: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அருண்குமார் என்பவரை தேடி, காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டிற்குள் கால்துறையினர் அத்துமீறி நுழைந்து செம்புலிங்கத்தை தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, அவரது உறவினர் கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உடற்கூராய்வு நடத்தி அமைதியான முறையில் இறுதி சடங்குகளை நடத்த உறவினர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று (டிச.15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, சந்தேகம் மரணம் என்ற பிரிவில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், உதவி ஆய்வாளர் தான் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விவசாயி மரணம் தொடர்பான விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததுடன், செம்புலிங்கத்தின் உடற்கூராய்வு அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.