ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் பரணிதரனுக்கு முன் ஜாமீன்

author img

By

Published : Jun 25, 2021, 2:42 PM IST

திருமணம் செய்வதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் பரணிதரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

சென்னை: திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கரு கலைப்பு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர் பரணிதரன் ஆகியோருக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்ற காவல்

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, கடந்த 20ஆம் தேதி கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மணிகண்டன் உதவியாளர் பரணிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தாம் எந்த குற்றம் செய்யவில்லை எனவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், ஆகவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. இதற்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், பரணிதரண் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை; எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை மனுதரார் வெளியிட்டுள்ளார். எனவே முன் ஜாமீன் வழங்க கூடாது எனத் தெரிவித்தார்.

ஆதாரம் இல்லை

அப்போது நீதிபதி தண்டபாணி, புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை மனுதரார் வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரம் இல்லை. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்பந்தப்பட்ட புகார் அளித்த பெண்ணை அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளதாக முதல் தகவல் அறக்கையில் உள்ளது.

அவர் மீதுள்ள மற்ற எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை எனத் தெரிவித்தார். எனவே இந்த வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழக்கு: இன்று தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.