ETV Bharat / state

காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருகிறது - உயர் நீதிமன்றம் - திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல்

காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

author img

By

Published : Dec 31, 2022, 2:24 PM IST

சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக் கோரி திருப்பூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்போது, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கிய பங்காற்றுவதாகவும், இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வதால் நாடு மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் நாட்டில் காளான்களை போல அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளதுடன், இதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

சில ஹோட்டல் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தரமான உணவு வழங்காமல் பொதுமக்களுக்கு உடல் ரீதியான கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பூக்கடைக்குள் புகுந்த கார் - சிறுவர்கள் காயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.