ETV Bharat / state

ஆன்லைன் பருவத் தேர்வுக்குத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி - ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு
ஆன்லைன் செமஸ்டர் தேர்வு
author img

By

Published : Feb 2, 2022, 1:58 PM IST

சென்னை: கரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக கல்லூரி பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், இறுதிப் பருவத்தேர்வுகள் நேரடியாக ஜூன் - ஜூலை மாதங்களில் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு உயர் கல்வித் துறை கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும் எனக் கூறி, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த தடைவிதிக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் இன்று (பிப்ரவரி 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.