ETV Bharat / state

ரிசர்வ் வங்கியின் விதியை மீறிய கனரா வங்கி மேலாளரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு! - criminal action

ரிசர்வ் வங்கி விதிகளை மீறி 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கனரா வங்கியின் மேலாளரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கனரா வங்கியின் மேலாளரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவு!

author img

By

Published : Aug 9, 2023, 8:35 PM IST

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலூரை சேர்ந்த தாமோதரன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் அனைத்தும் தன்னுடையது எனவும்; தொழிலதிபர் என்ற முறையில் தமக்கு தேவைப்படும் நிலையில் பணத்தை தமது மைத்துனரான தாமோதரனிடம் கொடுத்து வைத்திருந்ததாக ஸ்ரீனிவாசன் என்பவர் கூறினார்.

இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த விசாரணையில், ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றாமல் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, புதிய 200 ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்பட்டது தெரியவந்தது. வங்கி கிளையில் அல்லாமல் வங்கியில் உள்ள பணப்பெட்டகம் (Currency chest) மூலம் ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டது தெரியவந்தது.

இதற்கு வங்கி அதிகாரிகள் துணைபோனதாக அவர்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி வேலூர் கனரா வங்கியின் அப்போதைய மூத்த மேலாளர் தயாநிதி மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: திருடு போன செல்போனை கண்டுபிடிப்பது எப்படி? - புதிய இணையதளம் தொடக்கம்!

இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர் நீதி மன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஆகஸ்ட் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்படவில்லை என வாதிடப்பட்டது.

மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது எனவும்; இந்த விவகாரத்தில் அவசர கதியில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, ஆவணங்களில் முறைகேடு செய்து வங்கியின் பணப் பெட்டகத்தில் இருந்து நேரடியாகப் பணத்தை மாற்றியது மற்றும் ரிசர்வ் வங்கி விதிகளை மீறியது மட்டுமின்றி, வங்கி பாதுகாப்பினை மீறிய செயல் எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ரிசர்வ் வங்கி விதிகளை மீறி 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கனரா வங்கியின் மேலாளரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதையும் படிங்க: அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தமாக்க துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.