சென்னை: சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான 43 கிரவுண்ட் நிலம் கடந்த 1923ஆம் ஆண்டு கோபால நாயக்கர் சன்ஸ் என்ற நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டு 100 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மீட்கும் முயற்சியை மேற்கொண்டது, தமிழக அரசு.
இதையும் படிங்க: பாம்பு கடித்து இருவர் உயிரிழப்பு - சாலை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த 8 கிமீ நடந்து சென்ற கலெக்டர்!
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 43 கிரவுண்ட் நிலத்தில் 25 ஏக்கர் நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனவும்; அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டையும் தங்களுக்கு அளித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 100 ஆண்டுகளாக நிலத்தின் உரிமையை தாங்கள் அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரிய அளவிலான அரசின் நிலத்தை குத்தகைக்கு விடும் போது, அதன் வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் - கையும் களவுமாக சிக்கியது எப்படி?
மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் குத்தகை தொகையை உயர்த்த வேண்டுமென தெரிவித்துள்ள நீதிபதி, அரசின் நிதி நிர்வாகத்தைப் பாதுகாக்கும் வகையில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க நில நிர்வாக ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதிக மதிப்புடைய அரசு நிலங்களின் ஆவணங்கள் காணாமல் போனதாக புகார்கள் வந்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது எனவும் தமிழக அரசுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மணிப்பூர் வன்முறை: கோவையில் பழங்குடி மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் நடனமாடி ஆர்ப்பாட்டம்!