ETV Bharat / state

கோயில் கட்டுமான விதிகள் செல்லும்- சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், புதிய விதிகள் வகுக்கும் வரை, கோயில்களில் கட்டுமானம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

HC
HC
author img

By

Published : Aug 25, 2021, 9:57 PM IST

Updated : Aug 26, 2021, 7:01 AM IST

சென்னை : இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் உள்ள, கோயில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், கோயில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிபபு, நிர்வாகம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படாததால் இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், புதிய விதிகள் வகுக்கும் வரை, கோயில்களில் கட்டுமானம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, சட்ட விதிகளை ரத்து செய்வதற்கான எந்த காரணங்களும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், சட்டத்தில் உள்ள தேவையற்ற விதிகளை நீக்கி, புதிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும், கோயில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், அதன் கட்டிடக்கலை மதிப்புக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடலில் நீராட பக்தர்களுக்கு அனுமதி

Last Updated : Aug 26, 2021, 7:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.