ETV Bharat / state

'பிப்.8ஆம் தேதி முதல் வழக்குகளின் நேரடி விசாரணை தொடங்கும்' - தலைமை பதிவாளர்! - நேரடி வழக்கு விசாரணை

சென்னை: 10 மாத இடைவெளிக்குப் பிறகு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் வழக்குகளின் நேரடி விசாரணை தொடங்கவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிப்.8ஆம் தேதி முதல் வழக்குகளின் நேரடி விசாரணை தொடங்கும்

author img

By

Published : Feb 4, 2021, 7:28 AM IST

கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை ஆகியவற்றில், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் வழக்குகளின் விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், வழக்கறிஞர்கள் விரும்பினால் காணொலி காட்சி மூலமாக ஆஜராகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடி வழக்கு விசாரணையை பொறுத்தவரை இறுதிவிசாரணை வழக்குகள் மட்டுமே காலை, மாலை என இருவேளைகளிலும் நடைபெறும் என்றும் மற்ற வழக்குகள் காணொலி மூலமாக மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறை பிரிவுகளில் ஒரு நேரத்தில் ஐந்து வழக்கறிஞர்கள் அல்லது குமாஸ்தாக்கள் அல்லது மனுதாரர்கள் ஆகியோரை அனுமதிப்பது எனவும் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைகளை பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு ஐந்து வழக்குகள் மட்டுமே விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு இரு வழக்கறிஞர் வீதம் அறையின் பரப்பளவை பொறுத்து 6 முதல் 10 வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வழக்கறிஞர்கள் பதிவுத்துறை ஒதுக்கியுள்ள இடத்தில் காத்திருக்க வேண்டுமெனவும், வழக்கு முடிந்தபின் வராண்டாவில் நிற்காமல் வெளியேறிவிட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அறைகளை பொறுத்தவரை சுத்தப்படுத்தவும், கிருமிநாசினி தெளிக்கவும் அறைகள் திறக்கப்பட்டு உடனடியாக மூடப்படும் எனவும் அறைகளை திறப்பது தொடர்பாக பிப்ரவரி இறுதியில் முடிவெடுக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உணவகங்களை பொறுத்தவரை அரசு வகுத்துள்ள விதிகளின்படி திறந்துகொள்ள அனுமதியளிப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கீழக்கரை பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தை அகற்றக்கோரிய வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.