பாஜகவைச் சேர்ந்த நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி, கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வாங்குவதற்காக இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
வீடு வாங்கியவுடன் சில தவணைகள் மட்டும் வட்டி கட்டிவிட்டு அதன் பின்னர் தவணைப் பணம் கட்டாமலிருந்துள்ளார். பல முறை அவரை தவணை கட்ட சொல்லிக் கட்டாமலிருந்துள்ளார்.
இதனால் அசலோடு சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை செலுத்துமாறு மதுவந்திக்கு வங்கி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு மதுவந்தியிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால் தனியார் நிதி நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுவந்தியின் வீட்டிற்குச் சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுவந்தியின் வீட்டை ஏலத்தில் விற்பனைக்கு விடுவதாக இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏலத்தில் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஏலத்தில் பங்குபெற வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் ஏலத்துக்கு வரும் சொத்தின் அடிப்படை தொகை ரூ.1,50,00,000 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: LKG சீட் வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி - மதுவந்தி மீது புகார்!