சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச. 14) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அமைச்சர் பதிவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றுவேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர் மேடையில் வைத்து தந்தையின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார். தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி உட்பட 35 அமைச்சர்களும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அமைச்சர் உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாமன்னன் தான் தனது கடைசி படம் என அமைச்சராக பதிவியேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், தன் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் தருவேன். இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றபோதும் விமர்சனங்கள் வந்தன என்றார். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான பணிகள் நடக்கும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: TN Cabinet Expansion: அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.. துறைகள் என்ன?