ETV Bharat / state

பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் எனக்கூறும் அமைச்சர்

author img

By

Published : Aug 12, 2022, 4:49 PM IST

பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்

பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னை தீவுத்திடலில் ’சிங்காரச்சென்னை உணவுத்திருவிழா 2022’ இன்று தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் தொடக்கவிழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”சிங்காரச்சென்னை உணவுத்திருவிழா என்ற தலைப்பில் இன்று தொடங்கி 3 நாட்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவைமிக்க உணவு, உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படாத உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உடல் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு இந்த உணவு கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும்” என்றார்.

மேலும், ”கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உணவு பாதுகாப்புத்துறையில் மூன்று அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்று சூடான உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களின் மீது விற்கும் நடைமுறைக்கு எதிரான விழிப்புணர்வு, உணவுப்பொருட்களை லேபிள்களைப் பார்த்து தெரிந்து அறிந்து கொண்ட பிறகு பொருட்களை வாங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கடந்த ஓராண்டில் மட்டும் 23.33 லட்சம் லிட்டர் எண்ணெய் பெரிய நிறுவனங்களிடமிருந்து ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவை அரசு பெற்றுக்கொண்டு, பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், இந்த உணவு கண்காட்சியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளுக்குத் தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணிக்கு ஏன் அரங்கு அமைக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், ”நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன். உணவு என்பது தனி மனித உரிமை, பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கப்பட்டு இருப்போம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ”மக்கள் நல்வாழ்வுத்துறையில் 17,18 உட்பிரிவுகள் உள்ளன. அதில் உணவு பாதுகாப்புத்துறையும் ஒன்று. உணவு பாதுகாப்புத்துறையில் கலப்படம் இல்லா உணவு புறந்தள்ளப்பட்டு பாரம்பரிய உணவுகளைப் பயன்படுத்த வேண்டும். ஆர்கானிக் (organic) உணவுகள் என்று பல்வேறு கடைகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. அதனை உணவு பாதுகாப்புத்துறை கண்காணிக்க உத்தரவிட்டு இருக்கிறோம்” என்றார்.

மேலும், ’’உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து, மக்களுக்குத்தருவது என்பது விஷத்தைத்தருவது போன்றது, தவறு செய்பவர்கள் இனி அதுபோல செய்யமாட்டோம் என்று உறுதிமொழியை ஏற்க வேண்டும்’’ எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.