ETV Bharat / state

'தூய்மைப் பணியாளர்களுக்குத் தனி ஆணையம் வேண்டும்' - சென்னை அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு தனி ஆணையம் வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரிடம் வைக்கப்படும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் மா. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மா.வெங்கடேசன்
மா.வெங்கடேசன்
author img

By

Published : Jul 21, 2021, 5:57 PM IST

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் மா. வெங்கடேசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் மா. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

பாலியல் புகார்

குறிப்பாக சில பெண் பணியாளர்கள் பாலியல் புகார்களும் தெரிவித்தனர். அது குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா‌‌. சுப்பிரமணியன், முன்னாள் மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து மனு அளித்தார்.

தற்போது திமுகவே ஆட்சியில் உள்ளதால், தற்போது எங்கள் ஆணையம் சார்பில் அரசுக்கு கோரிக்கைவிடுக்கிறோம். மேலும் பெண் தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது புடவை அணிந்துகொள்ள கோரிக்கைவிடுத்தனர்.

பாதுகாப்பு கருதியே ஒளியை எதிரொலிக்கும் தன்மை உடைய ஆடை வழங்கப்படுகின்றன. இது குறித்து முடிந்தவரை நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருக்கிறது.

மனிதக் கழிவுகள் - தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தாதீர்!

இதுவரையிலும் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி வழங்கப்பட்டவுடன் ஒப்பந்தப் பணி முறையை ஒழிக்க கோரிக்கை வைக்கவுள்ளோம். இல்லையெனில் கர்நாடக மாநிலத்தில் உள்ளதுபோல், நிரந்தரப் பணியாளர்களுக்கு உள்ள சலுகைகளைப் போல, தற்காலிகப் பணியாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும், மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடக் கூடாது. அதைச் செய்யுமாறு யாரேனும் வற்புறுத்தினாலும் புகார் அளிக்க இலவச எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, சூழ்நிலையைப் புரிந்து அவர்களே முடிவெடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களையே துடைப்பம் உள்ளிட்ட பொருள்களை வாங்கச் சொல்வதாகவும் புகார்கள் வந்தன. யார் அவ்வாறு கூறினர் என ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்குத் தனி ஆணையம்

கரோனா காலத்தில் உயிரிழந்துள்ள தூய்மைப் பணியாளர்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கும் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம்.

தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்குத் தனி ஆணையம் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'நளினி, முருகன், சாந்தன் முன்விடுதலை கோரி மனு'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.