சென்னை: பெசன்ட் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கினார்.
-
இன்று பெசன்ட் நகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Inspection pic.twitter.com/jatsTF3Cyj
— Subramanian.Ma (@Subramanian_ma) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இன்று பெசன்ட் நகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Inspection pic.twitter.com/jatsTF3Cyj
— Subramanian.Ma (@Subramanian_ma) September 22, 2023இன்று பெசன்ட் நகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Inspection pic.twitter.com/jatsTF3Cyj
— Subramanian.Ma (@Subramanian_ma) September 22, 2023
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள 2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, கிராமம் மற்றும் நகரங்கள் வாரியாக பட்டியல்கள் தயார் செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு: உள்ளாட்சித் துறைகளுடன் இணைந்து கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 23,717 தற்காலிகப் பணியாளர்கள் தினசரி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் இதுவரை 4,227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்: இந்த ஆண்டு 3 நபர்கள் இறந்துள்ளனர். சென்னை மாநகரில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, 14.87 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பேரயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பிரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறிய புகைப்பரப்பும் இயந்திரம், வாகனங்களில் பொருத்தப்பட்ட 68 புகைப்பரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மருந்துகள் இருப்பு வைக்க அறிவுரை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 954 பணியாளர்கள், 2,324 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,278 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 23,717 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பருவமழைக் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர் காக்கும் மருந்துகளும், ரத்த அணுக்களை பரிசோதிக்கும் பரிசோதனைக் கருவிகள், ரத்தக் கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றும் பணி: உள்ளாட்சி அமைப்புகள் பொது சுகாதாரத்துறையோடு இணைந்து டயர், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பொது கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும் நீட் தேர்வுக்கான விலக்கு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்த அவர், நீட் தேர்வு இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
மேலும் பேசிய அவர், “நீட் தகுதி தேர்வு தேவையற்றது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொள்ளத் தொடங்கி விட்டது. இதனால் சட்டப்பூர்வமாக இளநிலை, முதுநிலை நீட் தேர்வுகளுக்கான விலக்கு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது” என்று தெரிவித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஆத்தூர் அருகே புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஈபிஎஸ்!