சென்னை: ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 15) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
திரைத்துறையில், நடிகர் ரஜினிகாந்த் முதலில் வில்லனாக வந்து, பின்னர் ஹீரோ ஆகியது போல், அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளது. ஆனால், திமுக தேர்தல் அறிக்கை, இரண்டாவது ஹீரோவாக ஆக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
கட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன், திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’திமுக அறிக்கை கதாநாயகன்; அதிமுக அறிக்கை வில்லன்’