சென்னை: இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதோடு, 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.
கறுப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காகத் தமிழ்நாடு முழுவதும் ஏழாயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, மதுரையில் தலா 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கறுப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. நேற்று (ஜூலை 18) தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா 3ஆம் அலை தொடர்பாக பொதுமக்களுக்குப் பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்ட பின் அறிவிப்பார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 விழுக்காடு தடுப்பூசிகளில், 10 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது.
பொதுமக்களுக்குத் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த அதற்கான தொகையைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறுவது தொடர்பாக, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நாளை (ஜூலை 20) கோவை மாவட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு