எதிர் வரும் தேர்தலில் எந்தக்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து லயோலா கல்லூரி நிர்வாகம் வெளியிட்டதாக, ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. இந்தக் கருத்துக் கணிப்பு பரவலாகப் பேசப்பட்ட நிலையில், அக்கல்லூரி நிர்வாகம் தற்போது அது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
லயோலா கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், “லயோலா கல்லூரி 2021ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக எந்த வகையிலும் கருத்துக்கணிப்பு நடத்தவில்லை. தேர்தல் போக்குகளை பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
![லயோலா கல்லூரி முதல்வர் வெளியிட்ட அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11119033_thu.jpeg)
எனவே லயோலா கல்லூரியின் பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால், ஊடக நண்பர்கள் அதனை புறக்கணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் போக்குகளை வெளியிட சென்னை, லயோலா கல்லூரி என்ற பெயரை பயன்படுத்தும் தனிநபர்களையும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:’மொத்த நாட்டையும் சரி செய்வதற்காக வந்திருக்கிறேன்’ - சீமான் நம்பிக்கை