தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முன் தினம் (ஏப்ரல்.06) நடைபெற்று முடிந்தது. அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை.
கோடைக் காலம் என்பதால் தற்போது மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் நாளன்று மின் நுகர்வு ஐந்து கோடி யூனிட்கள் சரிவை சந்தித்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நாளன்று 31 கோடி 31 கோடி யூனிட் மின் நுகர்வு மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் கோடைக் காலத்தில் மின் தேவை அதிக அளவு இருக்கும் என்பதால் தற்போது 36 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுபடுத்த கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிக நியமனம்!