ETV Bharat / state

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு - லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி சொத்துக்கள் முடக்கம்! - லாட்டரி விற்பனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய மேலும் 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை 908 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 15, 2023, 10:33 PM IST

Updated : May 16, 2023, 3:21 PM IST

சென்னை: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் சில விதிகளுக்குட்பட்டு லாட்டரி விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் மார்ட்டின் என்கிற கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் முக்கிய நபராக இருந்து வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துனர். கடந்த 2009 - 2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

அதனடிப்படையில் கேரள மாநிலம், கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின்கீழ் மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் மார்ட்டின் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்குச் சொந்தமான கட்டடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மார்ட்டினுக்கு தொடர்புடைய 451.07 கோடி ரூபாய் மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கொச்சின் அமலாக்கத்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள மார்ட்டினின் வீடு, மருமகன் ஆதவ் அர்ஜுனின் அலுவலகம், கோயம்புத்தூரில் உள்ள வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாக தெரிவித்து உள்ளனர்.

சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக இருப்பு தொகை, முதலீட்டு தொகை, அசையும் மற்றும் அசையா சொத்துகள் என 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மார்ட்டினுக்கு தொடர்புடைய மொத்தம் 908 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் கிடங்கு முன் நின்ற லாரியில் திருட்டு; பெட்டியில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியது யார்?

Last Updated : May 16, 2023, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.