ETV Bharat / state

டாஸ்மாக், தேநீர்க்கடை திறப்பு:  கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறை - lockdown new relaxation

கரோனா தொற்று குறைவான 27 மாவட்டங்களில் இன்றுமுதல் அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

lockdown
கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு
author img

By

Published : Jun 14, 2021, 12:08 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மே 24 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது.

இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நோய்ப் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராத 11 மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அவை இன்றுமுதல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருகிறது.

  • தேநீர்க்கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • டாஸ்மாக் கடைகள் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்
  • பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுபோல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
  • பொதுமக்களின் நலன்கருதி அரசு அலுவலகத்திலிருந்து சான்றிதழ்கள், சேவைகளைப் பெற இனி இ-சேவை மையங்கள் இன்றுமுதல் இயங்கவுள்ளன.
  • அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • கட்டுமான பணிகள் மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காததால், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும் வாங்கும் கட்டுமான பொருள்களுக்குப் பணம் செலுத்தும் பணிகளைக் கருத்தில்கொண்டு, கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.