சென்னை: மாமல்லபுரத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அலுவலர்கள் இன்று (அக்.14) தகவல் தெரிவித்தனர்.
பாரம்பரிய ஜவுளி ரகங்களைப் பாதுகாக்கவும், புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வண்ண வண்ண ஜவுளி தயாரிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. காஞ்சிபுரம் பனராஸ் பட்டு, சின்னாளப்பட்டி சுங்கடி சேலை உள்ளிட்ட பராம்பரிய ஜவுளி ரகங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
சட்டப்பேரவையில் கைத்தறி மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் மூலம் 5.61 கோடி ரூபாய் மதிப்பில் கைவினை அருங்காட்சியகம் அமைக்க இடம் முன்னதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைத்தறி அருங்காட்சியகம் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க இடம் தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 40 அடி உயரத்தில் பிரமாண்ட ஸ்தூபி அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்