ETV Bharat / state

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கூட்டம்: அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன? - local body election admk allaince metting

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இன்று அக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

seat share meeting of admk alliance
seat share meeting of admk alliance
author img

By

Published : Dec 6, 2019, 9:45 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகின்றன. அதன் ஒருபகுதியாக அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தேமுதிக சார்பில் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, கொள்கைபரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன் ராஜ், பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, மத்திய முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், தமாகா சார்பில் ஞானதேசிகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியில் எப்படி போட்டியிடுவது, எந்தெந்த தொகுதியைப் பகிர்ந்துகொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்தோம். ஒட்டுமொத்தமாக அதிமுக கூட்டணி எப்படி மாபெரும் வெற்றிபெறுவது குறித்தும் ஆலோசித்தோம்.

இதனை, ராமதாஸ், அன்புமணி ஆகியோருடன் ஆலோசனை செய்து எங்கள் முடிவை தெரிவிப்போம். இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தைதான் முடிந்துள்ளது. அடுத்து கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். பாமகவுக்கு வலுவான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

தேமுதிக கொள்கைபரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அதில் முழுமையாக வெற்றிபெறுவது குறித்தும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்கள் கூறிய கருத்தை எங்கள் தலைவர் விஜயகாந்த்திடம் கூறி, பேச்சுவார்த்தை செய்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.

இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்பது குறித்துதான் இன்று பேசினோம். மறைமுக தேர்தல் ஏற்கனவே நடந்த ஒன்றுதான் என்பதால், அது குறித்த எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் தேர்தல் நடைபெறும்” என்றார்.

மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் எந்த வகையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து பாஜக சார்பில் பேசினோம். இந்தப் பேச்சுவார்த்தைக்கு திடீரென அழைப்பு வந்தது. இருப்பினும், இதில் கலந்துகொண்டோம். தொகுதிப் பங்கீடு குறித்து இன்று எதுவும் பேசவில்லை. தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து கருத்து தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.

தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதிமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டு நடத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் திமுகதான் தேர்தலுக்கு அஞ்சி அதை நிறுத்த நீதிமன்றம் சென்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

Intro:Body:அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை இன்று நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. இதன்படி அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தை இன்று நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடக்கவுள்ளது. இதில் முதல்வர், துணை முதல்வர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் துணை செயலாளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன் ராஜ், பாமக சார்பில் பாமக தலைவர் மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பாஜக பொன். ராதாகிருஷ்ணன், த மா கா ஞானதேசிகன் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்துள்ளனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.