நடைபெற்று முடிந்த 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 315 வாக்குச்சாவடிகளில் எண்ணப்படும் பணிகள் ஜனவரி 2ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது.
வாக்குகள் எண்ணும் பணி முற்றிலும் முடிந்தும், இதுவரை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 513 பதவியிடங்களுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், அதிமுக 214, திமுக 243, பாஜக 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 7, தேமுதிக 3, காங்கிரஸ் 15, மற்றவை 22 (இதில் அமமுக, உள்பட சுயேச்சைகளும் அடங்கும்) இடங்கள் முறையே வெற்றிகள் முறையே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக 1771, திமுக 2095, பாஜக 84, இந்திய கம்யூனிஸ்ட் 62, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33, தேமுதிக 97, காங்கிரஸ் 131, மற்றவை 796 இடங்கள் என 5090 இடங்களில் 5069 பதவியிடங்களுக்கு வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.
9624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் 9544 இடங்களுக்கு மட்டுமே வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களில் 69 ஆயிரத்து 422 பதவியிடங்களுக்கு மட்டுமே வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாசா வெளியிட்ட ஒலியையே திருத்தி பதிவிட்ட ஆளுநர் கிரண் பேடி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!