ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு - மாநில தேர்தல் ஆணையம் - local body election issue

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

chennai
chennai
author img

By

Published : Sep 3, 2021, 6:19 AM IST

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆயத்தமாகிவருகிறது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை மணிவரை இருந்த நிலையில், நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.