ETV Bharat / state

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் - OPS

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

author img

By

Published : Aug 11, 2021, 1:39 PM IST

சென்னை: ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று செப்டம்பர் 15இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ்-இபிஎஸ்
ஓபிஎஸ்-இபிஎஸ்

இந்நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஆலோசனை மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஓபிஎஸ்-இபிஎஸ்
ஓபிஎஸ்-இபிஎஸ்

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் அதிமுகவின் வெற்றியை நிரூபணம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ்-இபிஎஸ் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனப் பட்டித்தொட்டி எங்கும் பரப்ப வேண்டும் எனவும் அதிமுக தலைமை அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

அதிமுக
அதிமுக

இதையும் படிங்க: திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - ரெய்டு குறித்து எஸ்.பி. வேலுமணி கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.